இந்த வளைக்காப்பு படமானது வெளிநாட்டு பகுதியில் எடுக்க பட்டதாக தெரிகிறது. சீர் தட்டங்கள் இந்த வீடியோவில் விரிவாக காட்டபட்டுள்ளன. ஐந்து வகை சித்திரனங்கள் எனும் உணவுகள் சீர் தட்ட வரிசையில் படைக்க பட்டுள்ளது. பெரியவர் ஒருவர் அன்புடன் மாலை சூட்டி விழாவினை துவக்கி வைக்கிறார். குங்குமம், சந்தனம் என்பதாக மங்களகரமானவைகளை நெற்றியில் பூசுகிறார். பெரும்பாலான பகுதியில் வீட்டின் மூத்த பெண் பெரும்பாலும் மாமியார் அல்லது தாய் இந்த சடங்குகளை துவங்கி வைப்பார்கள். ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள். பின்னர் பெரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஒவ்வொருவராக ஆசி வழங்குகின்றனர். கை நிறைய வளையல்கள் அணிந்த சூழலில் பெண் தன் கைகளை ஆட்டி காட்டுகிறார். முகம் முழுக்க மகிழ்ச்சியுடன். விழாவுக்கு வெளியிலாக ஏதோ ஒரு வெளிநாட்டில் கணவன்-மனைவி இருவரும் உலாவரும் காட்சிகள் தொகுத்துள்ளார்கள். மிகவும் இனிமையான உணர்வுபூர்வ காட்சிகளாக அமைந்துள்ளது. இரத்தின சுருக்கமான தொகுப்பாகவும் நிறைய காட்சிகளை திரையில் காட்டியபடி சுவாரசியமாக உள்ளது இந்த காணொளி.