துவக்கத்திலேய வளைகாப்பு நடைபெறும் இடத்தினையும், பிண்ணனியில் ஒரு பெண் கைக்குழந்தையை வைத்து கொஞ்சுவது போன்று நம்மை கவர்வதாக அமைந்திருக்கிறது. துவக்கத்தில் (பெண்ணின்) பெற்றோர் தங்கள் மகிழ்ச்சியை பேட்டி போல பகிர்கிறார்கள். பெரியவர்கள் முதல் வளையளை அணிவித்து விழாவினை துவக்கி வைப்பதுடன் உற்றார், உறவினர், நண்பர்கள் என பலரும் வளையல் அணிவித்து ஆசி வழங்குகின்றனர். பலரும் பரிசு பொருட்களையும் பகிர்கிறார்கள். பிண்ணனியில் சில நெருங்கியவர்கள் தங்கள் உறவினை பற்றி பேசுவதாக அமைத்திருப்பது மிக சிறப்பான ஒன்று. நடுவில் கர்ப்பிணி பெண் தனது மிகப்பெரிய ஆச்சர்யம் தனக்கு இரட்டைக்கரு என்பதே இன்னமும் நம்ப இயலாத ஒன்றாக இருப்பதாக கூறுகிறார். கணவர் சட்டையிலும், பெண் தனது ஜடையிலும் அப்பா – அம்மா என்பதான வில்லையை அணிந்திருப்பது சிறு பிள்ளை தனமான குறும்பாக நமக்கு புன்னகை இதழோரம் வருவதை தவிர்க்க இயலவில்லை. பெண்ணின் வெள்ளந்தியான பேட்டி என்பது உணர்ச்சிகரமாக உள்ளது.